நெற்றியில் விபூதி இடுவதால் ஏற்படும் நன்மை !!


திருநீறு இல்லா நெற்றி பாழ் என்பது சித்தர்களின் வாக்கு. நெற்றியில் அணியும் திருநீறு விளக்கும், உயர்ந்த தத்துவம் என்னவென்றால், ‘நாடாண்ட மன்னனும், நூல் பல கற்ற வேத பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்’ என்பதாகும். 

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால், அதன் வழியாக அதிக சக்தி வெளிப் படுவதோடு, இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக்கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது.

சூர்ய கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து, நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக செய்யும். அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டதாக அறியப்படுகிறது. 

ரட்சை, சாரம், விபூதி, பஸ்மம், பசிதம் என்று திருநீறுக்கு பல பெயர்கள் உள்ளன.  நெற்றியில் ப்ரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது போல் ஆன்மீகத்தில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு சம்பிராதயமும் ஏன் செய்கிறார்கள் என்பதை தெரிந்து செய்தால் நாம் சீக்கிரமாக கடவுளுக்கு அருகில் செல்ல முடியும் .

எவராக இருந்தாலும் இந்த உடல் ஒரு நாள் மரணத்திற்கு பிறகு, இறுதியில் தீயில் வெந்து பிடி சாம்பலாக போகிறது “என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. ஆகையால் ,தூய்மையான அறநெறியில் இறை சிந்தனையோடு வாழ வேண்டும்.  பசுவின் சாணத்திலிருந்து சுட்டு தயாரிக்கப்படுவது திருநீறு. விபூதி அணியாமல் செய்யும் சிவபூஜை , ஜெபம், பிதுர் கர்மம் ,தேவர்களின் யாகம் முழுமை அடையாது .



Leave a Comment