எந்த கிழமையில் பிறந்தவர்கள், எந்த எண்ணிக்கையில் அரச மர இலை தீபத்தை ஏற்றினால், தோஷம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்!
அரசமரத்தின் வேர் பகுதியில், பிரம்மாவும், நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும், மேல்பகுதியில் அதாவது இலை கிளைகளில் சிவனும் வாஸம் செய்வதாக விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த மரத்திற்கு ‘ராஜ விருட்ஷம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.
நம்முடைய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக, நீங்க வேண்டும் என்றால், அரசமரத்தடி பிள்ளையாரை 108 முறை தினமும் சுற்றினாலே போதும். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயமாக இருக்கலாம்.
அரச மரத்திற்கும், அரசமரத்தடி பிள்ளையாருக்கும், அபரிமிதமான சக்தி இருக்கின்றது என்றால் நிச்சயம் அந்த கூற்று பொய்யாகாது. அரச மர இலையில், மண் அகல் அல்லது நாம் வீட்டில் உள்ள வேறு விளக்கு வைத்து, தீபம் ஏற்றும் பட்சத்தில் நாம் செய்த பூர்வ ஜென்ம பாவம், நம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷம், நவக்கிரக தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற அனைத்தும் தீரும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எந்த கிழமையில் பிறந்தவர்கள் எத்தனை தீபங்களை ஏற்றினால் அதிகப்படியான பலனை அடையமுடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அரசமர காற்றை சுவாசிக்கும் போது, பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் குணமாகும் என்பதும் அறிவியல் ரீதியான உண்மை தான்.
திங்கட் கிழமையில் பிறந்தவர்கள் 3 அரச இலைகளை வைத்து, அதன்மேல் 3 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்கள் 2 அரச இலைகளை வைத்து, 2 மண் அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.
புதன்கிழமை பிறந்தவர்கள் 3 அரச இலைகளை வைத்து, 3 மண் அகல் தீபங்கள் ஏற்றவேண்டும்.
வியாழக் கிழமை பிறந்தவர்கள் 5 அரச இலைகளை வைத்து, 5 மண் அகல் தீபம் ஏற்ற வேண்டும்.
வெள்ளிக் கிழமை பிறந்தவர்கள் 6 அரச இலைகளை வைத்து, 6 மண் அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும்.
சனிக் கிழமை பிறந்தவர்கள் 9 அரச இலைகளை வைத்து, 9 மண் அகல் தீபங்கள் ஏற்றவேண்டும்.
ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்கள் 12 அரச இலைகளை வைத்து, 12 மண் அகல் தீபமேற்ற வேண்டும்.
நீங்கள் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இப்படி ஒருமுறை தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் உண்டு.
இல்லை என்றால், அரசமரத்தடி பிள்ளையாருக்கு முன்பாக, இப்படி தீபம் ஏற்றி, விநாயகரை பாலபிஷேகம் செய்து வழிபட்டாலும் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்கள் கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment