தெய்வத்திடம் வைக்கும் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற பரிகாரம்!


நம் பூமியை 27 நட்சத்திரங்கள் ஆளுகின்றன.  அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நட்சத்திரத்தை ஒதுக்கி அந்த நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனின் உடம்பிலுள்ள குறிப்பிட்ட பாகத்திலும் அந்த நட்சத்திர சக்கரம் மறைந்து செயல்படுகிறது.  அவ்விடத்தை கண்டு உணராத வரை ஒரு பரிகாரமும் பலன் தருவதில்லை.

உடலில் நமது  ஜென்ம நட்சத்திரம் மறைந்துள்ள இடத்தை நம்மை அறியாமலேயே தொட்டு வணங்கி உணர்வை கொடுத்து இருந்தால் பலன் கிடைக்கும். ஏதேச்சையாக தொடுவதைவிட உணர்ந்து தொட்டால்தான்  பலன் பெருகும். எனவே அவரவர் ஜென்ம நட்சத்திரம் உடலில் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

நட்சத்திரம் - உடலில் மறைந்துள்ள பாகம்
அசுவினி,பரணி, கிருத்திகை
ஆகிய நட்சத்திரங்கள்
-நெற்றி முழுவதும் உள்ள இடமாகும்

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்கள்- 
நெற்றியை தவிர்த்து முகம் முழுவதும் உள்ள இடமாகும்

புனர்பூசம், பூசம் ஆகிய நட்சத்திரங்கள்-- இரு தோள்களாகும்.

ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் ஆகிய நட்சத்திரங்கள் - மார்பு பகுதியாகும்.

சித்திரை நட்சத்திரம் உள்ள இடம் வயிறு பகுதியாகும்.

சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள்-- புஜங்கள் இரண்டுமாகும்.

அனுசம் - பாலின உறுப்பாகும்.

கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்கள்-- இரு கைகளாகும்.

பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள்-- தொடைகள் இரண்டுமாகும்.

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ,ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருகால்
பாதங்களாகும்.

மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒன்று தான் உங்கள் நட்சத்திரமாக இருக்கும்.

எனவே நீங்கள் எந்த தெய்வத்திற்கு எங்கு வழிபாடு செய்தாலும் உங்கள்  ஜென்ம நட்சத்திரம் உடலில் மறைந்துள்ள பாகம் எதுவோ அதை நினைவுகூர்ந்து அங்கு தொட்டு வணங்கி வேண்டினால் உங்களின் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.
 



Leave a Comment