நாட்டின் நிலையை கணிக்கும் கள்ளழகருக்கு அனுப்பும் பட்டின் நிறம் தேர்வு எப்படி?:
மதுரையில் சித்திரா பெளர்ணமியின் போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் கொடுத்தனுப்பும் பட்டுப்புடவையை கள்ளழகர் அணிந்து கொண்டு ஆற்றில் இறங்குகிறார். கள்ளழகர் உடுத்தும் பட்டுப்புடவையின் நிறத்தை வைத்து, அந்த ஆண்டில் நாட்டின் நிலை எப்படியிருக்கும் என்று கணிப்பதுண்டு.
இந்த ஆடை, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு சாத்தப்படுவதற்காக புடவைகள் வைக்கப்பட்டிருக்கும் பரிவட்ட அறையில் இருந்து, பணியாளரால் எடுக்கப்படுகிறது. புடவை எடுப்பவர் நிறத்தையும் பார்ப்பதில்லை. கள்ளழகரின் விருப்பத்தால், ஏதேனும் ஒரு நிறத்தில் புடவை வரும் என்கின்றனர்.
ராஜாங்க கோலம்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.
கருடாழ்வாரின் மூன்று பதவி:
கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.
Leave a Comment