வீட்டில் செல்வம் நிலைத்திருக்க...   ஸ்ரீ ஜெய பஞ்சகம்


ராம நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்னமாவார் என்பது ஐதிகம்.  ஆகவே சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை - சுத்தமான விரிப்பு போட்டு வைக்கிறோம் ). ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். 

இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும். கற்பின் கனலியான சீதை  அக்னியில் இரண்டு முறை இறங்கியவள்.  ஆபத்தில் சிக்கும் உயிர்களைக் காப்பாற்றுபவன் ஆச்சார்யன் என்ற குரு. ஒரு நல்ல குரு  இறைவனை அடையும் வழியைச் சொல்லித் தந்து விடுவார்.

சீதையாகிய ஜீவாத்மாவை, ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்க்கும் திவ்ய பணியைச் செய்ய ஆஞ்சநேயர் கிளம்புகிறார் இலங்கை நோக்கி இதனால் தான் ஸ்ரீராமனின் அருளைப் பெற ஆஞ்சநேயரை வணங்கினாலே போதும்! ஸ்ரீராமஜெயம் என்று சொன்னாலே போதும். அவர் அங்கே வந்து நின்று விடுவார். 

ஜயத்யதிபலோ ராமோ லஷ்மணஸ்ச மஹாபல

 ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித

தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன

ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஸ

ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்

ஸலாபிஸ்து ப்ரஹரத பாத வைச்ச ஸஹஸ்ரஸ. 

சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள்  ஸ்ரீ ஜெய பஞ்சகம் எனப்படும். இதைச் சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். 



Leave a Comment