வீட்டில் இதையெல்லாம் தவறிக்கூட செய்து விடக்கூடாது
நெருப்பை வாயால் ஊதி அணைக்கக்கூடாது. இக்காலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கும் வழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பெண்கள் பூசணிக்காயை உடைக்கக்கூடாது. ஆண்கள் தீபத்தை அணைக்கக்கூடாது.
செவ்வாய், சனி, அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு போன்ற நாட்களில் முடி வெட்டிக் கொள்ளுதல், க்ஷவரம் செய்து கொள்ளுதல் கூடாது. ஒற்றை ஆடையுடன் உணவு உண்ணக் கூடாது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் காலை 8.30 மணிக்கு மேல் தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். தீபாவளியைத் தவிர்த்த பிற நாட்களில் காலை 8.30 மணிக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கையில், வேறொருவர் தான் நம் தலைக்கு எண்ணெய் தடவி விட வேண்டும். நாமே தடவக்கூடாது.
நெற்றியில் திலகம் இடுகையில் நாமே இட்டுக் கொள்ள வேண்டும், வேறொருவர் இடக்கூடாது. வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டோ, கட்டிலில் அமர்ந்துகொண்டே உணவு உண்ணக் கூடாது.
இரண்டு ஆடுகளுக்கு நடுவே செல்லக் கூடாது. ஆட்டின் புழுதி நம் மீது பட்டால் நீராட வேண்டும். பசுமாட்டின் புழுதி நம் மீது பட்டால், அதுவே நீராடியதற்குச் சமம்.
மின்னல், எரிநட்சத்திரம், கிரகணம், காலை ஒளி, மாலை ஒளி உள்ளிட்டவற்றைப் பார்க்கக் கூடாது. எழுந்து செல்லும் நபரை அழைக்கக் கூடாது. எங்கே போகிறீர்கள் என்று கேட்கக் கூடாது.
இல்லறத்தில் உள்ள ஆண், கச்சம் வைத்துத் தான் வேஷ்டி அணிய வேண்டும்.
லட்சுமி எந்த வீட்டில் குடியிருக்கிறாளோ, அந்த வீட்டில் இன்பம், அறிவு, பேச்சாற்றல், வலிமை, செழிப்பு, வெற்றி, செல்வம் ஆகிய அனைத்தும் நிறைந்திருக்கும்.
Leave a Comment