பிலவ தமிழ் புத்தாண்டு பலன்கள் மற்றும் பாதசார விபரங்கள்
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசார்வரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதிம் பின்னிரவு - ஸ்ரீப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 01ம் தேதி முன்னிரவு - 14.04.2021 - அன்றைய தினம் புதன்கிழமை பின்னிரவு வியாழக்கிழமை முன்னிரவு - சுக்ல பக்ஷ த்வீதியையும் - பரணி நக்ஷத்ரமும் - ப்ரீத்தி நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் - மகர லக்னமும் - மேஷ நவாம்ச லக்னமும் - மேஷ சந்திரா லக்னமும் - கன்னியா நவாம்ச சந்திரா லக்னமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 01.48க்கு (உதயாதி நாழிகை: 49:11க்கு) மகர லக்னத்தில் ஸ்ரீப்லவ வருஷம் பிறக்கிறது.
கிரக பாதசார விபரங்கள்:
லக்னம் - திருவோணம் 1ம் பாதம் - சந்திர சாரம்
சூர்யன் - அஸ்வினி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - பரணி 2ம் பாதம் - சுக்கிரன் சாரம்
செவ்வாய் - ம்ருகசீரிஷம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
புதன் - அஸ்வினி 2ம் பாதம் - கேது சாரம்
குரு - அவிட்டம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம் - அதிசாரம்
சுக்ரன் - அஸ்வினி 1ம் பாதம் - கேது சாரம்
சனி - திருவோணம் 1ம் பாதம் - சனி சாரம்
ராஹு - ரோகினி 3ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - கேட்டை 1ம் பாதம் - புதன் சாரம்
சுக்கிரன் தசை இருப்பு: 10 வருஷம் - 03 மாதம் - 05 நாள்
ப்லவ வருஷத்தின் நவநாயகர்கள்:
ராஜா - செவ்வாய்
மந்திரி - புதன்
அர்க்காதிபதி - செவ்வாய்
மேகாதிபதி - செவ்வாய்
ஸஸ்யாதிபதி - சுக்கிரன்
சேனாதிபதி - செவ்வாய்
இரஸாதிபதி - சூர்யன்
தான்யாதிபதி - குரு
நீரஸாதிபதி - சுக்கிரன்
பசுநாயகர் - கோபாலன்
ப்லவ வருஷ வெண்பா:
பிலவத்தில் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதி துன்பம் தருக்கும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளான்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்
- இடைக்காடர் வாக்கு
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Leave a Comment