மகாலட்சுமி நம் வீட்டில் எப்போதும் வசிக்க இதை செய்தால் போதும்....!!!


சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்துக்குப் பின்னும் உறங்கிக்கொண்டிருக்கக் கூடாது. காலை எழுந்திருக்கும்போது, பசு, அக்னி, வேதம் கற்றவர் போன்றோரைப் பார்த்தல் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும். பசு மாட்டின் பால் கறக்கும் ஒலி, தயிர் கடையும் ஒலி, வேத கோஷம் உள்ளிட்ட நல்ல ஒலிகளைக் கேட்டபடி எழுந்திருத்தல் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

படுக்கையை விட்டு எழுந்தவுடன் வாய் கொப்புளித்து விட்டு, ஆசமனம் செய்ய வேண்டும். படுக்கையை விட்டு எழுந்தவுடனேயே எந்த உணவுப் பொருளையும் உட்கொள்ளக் கூடாது.

காலைக் கடன்களை முடித்தபின், கைகால்களைக் கழுவி அதன்பின் வாய் கொப்புளிக்க வேண்டும். கைகால்களைக் கழுவாமல் வீட்டினுள் நுழைந்தால், லட்சுமி அங்கே வசிக்க மாட்டாள்.

வாய் கொப்புளிக்கும்போது, தண்ணீரை இடப்புறம் உமிழ வேண்டும். வலப்புறம் உமிழக் கூடாது. பல் துலக்கும்போது ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தக்கூடாது. நடுவிரல், மோதிரவிரல் போன்ற விரல்களை பயன்படுத்தலாம்.

சூரிய உதயத்துக்கு முன் நீராடுவது விசேஷமாகும். வெந்நீரை விளாவும்போது, குளிர்ந்த நீரின் மேல்தான் வெந்நீரை ஊற்ற வேண்டுமே ஒழிய வெந்நீரில் குளிர்ந்த நீரை ஊற்றி விளாவக்கூடாது.

வெள்ளைநிற வேஷ்டியையே உடுத்த வேண்டும். கரை இல்லாத வேஷ்டியையோ, நீலம் அல்லது கருப்புக் கரைபோட்ட வேஷ்டியையோ உடுத்தக்கூடாது. சந்நியாசிகள் மட்டுமே காவி நிற வேஷ்டியை உடுத்தலாம். வெறும் நெற்றியுடன் இருக்கவே கூடாது. எப்போதும் நெற்றியில் அவரவர் குடும்ப மரபின்படித் திலகம் இட்டுக்கொள்ள வேண்டும்.

உணவு உட்கொள்ளும் முன் அவசியம் கை கால்களை அலம்பிக் கொள்ளவேண்டும். உண்டபின்னும் கை கால்களை அலம்ப வேண்டும். அவசியம் வாய் கொப்புளிக்க வேண்டும். கை கால்களை அலம்பாமல் உணவு உட்கொள்பவர் வீட்டில் மகாலட்சுமியின் தமக்கை குடிவந்துவிடுவாள்.
 



Leave a Comment