திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி தெரிந்து கொள்ள வேண்யவை....
மதுரை மீனாட்சி ஸ்ரீ ரங்கம் கோவில்கள் இஸ்லாமிய படையெடுப்பில் சூறையாடப்பட்ட போது தென் இந்தியாவில் தப்பிய கோவில் இது மட்டுமே என்று கூறப்படுகிறது. வருடத்தில் 365 நாள்கள் மட்டுமே வருடத்தில் இங்கு 450 திருவிழா நடைபெறுகிறது தலவிருட்சம் புளியமரம். பெருமாளுக்கு நைவேத்தியம் தயிர் சாதம் மட்டுமே மண் பாத்திரத்தில்.
திருப்பதி செல்லும் முன் குலதெய்வத்தை வழிபட்டு தான் புறப்பட்டு செல்ல வேண்டும் திருப்பதி தேவஸ்தான அறிவிப்பில் இந்த வார்த்தை அறிவுறுத்தலில் இடம் பெற்ற இருக்கும் . முன்பு பல நாட்கள் பயணப்பட்டு திருப்பதி செல்வார்கள் இப்போது இப்படி போய் அப்படி வந்துவிடலாம்.
அகோபில முதலாம் ஜீயர் சுவாமிகள் ஸ்ரீ சடகோப யதீந்திரா மகா தேசிகர் தான் முதலில் மலைமீது செல்ல படி அமைத்தார்கள். மலைக்கு செல்லும் இரண்டாம் நடை வழி ஸ்ரீ வாரி மெட்டு திருப்பதிக்கு 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீ நிவாசமங்காபுரத்தில் மலைக்கு போகலாம் ஆந்திரப் பிரதேச மக்கள் இந்த வழியில் தான் மலைக்கு நடைபயணம் செல்வார்கள். திருவண்ணாமலை எப்படி மலையே சிவனாக இருப்பது போல திருப்பதி மலையே பெருமாளாக நினைத்து மலையேறும் முன் மலையை தொட்டு வணங்க வேண்டும்.
Leave a Comment