குலம் காக்கும் பங்குனி உத்திர நாள் குலதெய்வ வழிபாடு!  


குலத்தைக் காக்கும். சகல செளபாக்கியங்களுடன் நம்மை வாழவைக்கும் என்பது உறுதி. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை,

பங்குனி உத்திரம் நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். நம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக்கொண்டால், வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். 

ஒருவரின் பிறவியில் மிக முக்கியமான வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடாகத்தான் இருக்கும். நம் குலம் வாழையடி வாழையாக, வம்சம் வம்சமாக, பரம்பரை பரம்பரையாக ஒரு தெய்வத்தை வழிபட்டுக் கொண்டே வருவதுதான் குலதெய்வம். தலைமுறைகள் கடந்தும் நடந்துகொண்டிருக்கிற வழிபாடுதான் குலதெய்வ வழிபாடு என்பது!

உங்களின் குலதெய்வக் கோயிலுக்குச் செல்வதையும் குலதெய்வத்தை ஆராதித்து வணங்குவதையும் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ விடுமுறை காலங்களிலோ அல்லது வருடத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வ வழிபாட்டைச் செய்யவேண்டும்.

வீட்டில் இருந்துகொண்டே வீட்டில் இருந்தபடியே நாம் வம்சம் வம்சமாக குலதெய்வ வழிபாட்டைச் செய்யலாம். ஏதேனும் ஒரு கிழமையை தேர்வு செய்துகொண்டு அந்த நாளில், நம்முடைய முன்னோர்களின் வழக்கப்படி வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டும்.

முக்கியமாக, பங்குனி பெளர்ணமியும் உத்திரமும் இணைந்த அற்புதமான நாள் குலதெய்வ வழிபாட்டுக்கு ரொம்பவே உன்னதமான நாள். இந்த நாளில், நம் வீட்டைச் சுத்தப்படுத்தி, குலதெய்வப் படங்களுக்கு மாலைகளிட்டு அலங்கரித்து, இனிப்பு மற்றும் உணவுடன் படையலிட வேண்டும்.

குலதெய்வப் படங்கள் இல்லையென்றாலும் வீட்டில் இருக்கும் சுவாமிப் படங்களையே குலதெய்வமாக பாவித்து, மலர்கள் கொண்டு அலங்கரித்து படையலிட்டு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வணங்கவேண்டும். வழிபடவேண்டும். நம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். குலத்தைக் காக்கும். சகல செளபாக்கியங்களுடன் நம்மை வாழவைக்கும் என்பது உறுதி.

28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வோம். படையலிடுவோம். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். நம் அல்லல்கள் மொத்தமும் காணாமல் போகும்!
 



Leave a Comment