திருப்பதிக்கு செல்பவர்கள் நேரடியாக பெருமாளை தரிசனம் செய்வது சரியா?
உலகில் பழமையான மலைகளில் இரண்டாம் நிலையில் உள்ள சிலாதோரணம் இங்கு தான் உள்ளது சங்க இலக்கியங்களில் திருமலையானுக்கு இட்ட பெயர் வெறுங்கை வேடன்.
கோவில் கட்டிய வரலாறு அறிய முடியவில்லை ஆகாசராஜனின் தம்பி தொண்டைமான் என்கிறது தலபுராணம். சோழர் பல்லவர் பாண்டியர் சாளுக்கியர் விஜய நகர மன்னர்களால் பராமரிப்பு செய்த கல்வெட்டு உண்டு பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகள் தான் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் ஆச்சார அனுஷ்டங்கள் முறைப்படுத்தப்பட்டது.
மதுரை மீனாட்சி ஸ்ரீ ரங்கம் கோவில்கள் இஸ்லாமிய படையெடுப்பில் சூறையாடப்பட்ட போது தென் இந்தியாவில் தப்பிய கோவில் இது மட்டுமே (இதன் பிண்ணனியில் ஒரு செவிவழி கதை மலைமீது என்ன கோவில் என்ற போது வராகர் என்பதை பன்றி கோவில் என்றதால் இஸ்லாமியர் போகவில்லை என்று சொல்கிறார்கள் )
வருடத்தில் 365 நாள்கள் மட்டுமே வருடத்தில் இங்கு 450 திருவிழா நடைபெறுகிறது தலவிருட்சம் புளியமரம். பெருமாளுக்கு நைவேத்தியம் தயிர் சாதம் மட்டுமே மண் பாத்திரத்தில் .
சந்திர ஸ்தலம் என்னும் நமது நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட விஷயம். திருப்பதி குலதெய்வம் என்று சொல்பவர்கள் அதிக உண்டு ஒரு காலத்திலும் அப்படி இருக்க வாய்ப்பில்லை தமிழராக பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குலதெய்வம் என்பது கிராம தேவதைகளாக தான் இருக்கும் சிலரின் தவறான கருத்து முறையில் முன்னோரின் தொடர்பின் மை காரணமாக பெயர் பெற்ற கோவிலை குலதெய்வமாக அங்கீகாரம் செய்து கொண்டார்கள்.
திருப்பதி செல்லும் முன் குலதெய்வத்தை வழிபட்டு தான் புறப்பட்டு செல்ல வேண்டும் (திருப்பதி தேவஸ்தான அறிவிப்பில் இந்த வார்த்தை அறிவுறுத்தலில் இடம் பெற்ற இருக்கும் )
முன்பு பல நாட்கள் பயணப்பட்டு திருப்பதி செல்வார்கள் இப்போது இப்படி போய் அப்படி வந்துவிடலாம். அகோபில முதலாம் ஜீயர் சுவாமிகள் ஸ்ரீ சடகோப யதீந்திரா மகா தேசிகர் தான் முதலில் மலைமீது செல்ல படி அமைத்தார்கள்
மலைக்கு செல்லும் இரண்டாம் நடை வழி ஸ்ரீ வாரி மெட்டு திருப்பதிக்கு 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீ நிவாசமங்காபுரத்தில் மலைக்கு போகலாம் ஆந்திரப் பிரதேச மக்கள் இந்த வழியில் தான் மலைக்கு நடைபயணம் செல்வார்கள்.
திருவண்ணாமலை எப்படி மலையே சிவனாக இருப்பது போல திருப்பதி மலையே பெருமாளாக நினைத்து மலையேறும் முன் மலையை தொட்டு வணங்க வேண்டும் (காலால் மிதித்து நடப்பதற்கு பெருமாளிடம் உத்தரவுபெற இதன் பிண்ணனியில் எனக்கு ஒரு அனுபவம் உண்டு 2003 ல் திருப்பதி புராணம் படித்தேன் அதை படித்து விட்டு சரி மலைக்கு போகும் போது மிதியடி போடாமல் நடக்க வேண்டும் என்று எண்ணி கொண்டேன் அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து தான் மலைக்கு போனேன் இந்த மிதியடி விஷயம் மறந்து விட்டேன் காரில் இருந்து இறங்கி ஒரு அடி எடுத்து வைத்தேன் புது மிதியடி அறுந்தது அந்த நொடி தான் நினைவுக்கு வந்தது என் சங்கல்பம் அதோடு சரி அந்த முறை மூன்று நாட்களாக மலையில் தங்கி இருந்தோம் மூன்று நாட்களும் வெறும் காலாக தான் நடந்தேன் அதன் பிறகு இன்று வரை மலைக்கு போகவில்லை)
திருப்பதி போனால் பலர் நேராக பெருமாள் தரிசனம் தான் செய்கிறார்கள் இப்படி செய்வது தவறு. சிவன் கோவிலில் முதலில் சிவ தரிசனம் செய்து விட்டு மற்ற பரிவாரங்களை தரிசனம் செய்ய வேண்டும் ஆனால் பெருமாள் கோவிலில் முதலில் அனுமான் தாயார் கருடன் பிறகு தான் பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும்.
திருமலைக்கு செல்லும் முன் முதலில் அலமேலுமங்காபுரம் என்னும் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து தான் தான் மலைக்கு செல்லவேண்டும்.
Leave a Comment