சிறப்புமிக்க பங்குனி உத்திரம்....
சிறப்புமிக்க நன்னாளான பங்குனி உத்திரத்தன்றுதான்,
உமை சதாசிவனை வணங்கும் இமாவான் மகளாக ஹேமாவதியாக அவதரித்தார்.
சிவ சாபத்திற்கு ஆளாகி கடுந்தவம் இருந்த காமாட்சி- மலைமகளை ஈசன் மணந்த நாள்.
பெண்ணுக்குப் பிறக்காத பெண்களால் வளர்க்கப்படாத சிவ அம்சத்தால் தான் அழிய வேண்டும் என வரம் வாங்கிய மகிஷியை அழிக்க சாஸ்தா அவதாரம் நிகழ்ந்தது.
முருகன் தெய்வானையை மணந்தது.
மீனாட்சி சுந்தரேசரை மணந்தது,
ஆண்டாள் ரங்கமன்னாரை மணந்தது.
வெற்றிக்கு வழிகாட்ட முருகனுக்கு உகந்தது.
பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தன்று திருவாரூரில் தரிசித்துள்ளனர்.
மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் இந்த மாதத்தில் நடக்கும் விழாக்கள் வசந்த விழா எனப்படும்
வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.
புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.
பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி.
Leave a Comment