பிரதோஷ அபிஷேக பொருட்களுக்கும் அதன் பலன்களும்.... 


பிரதோஷத்தின் போது ,முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்பது ஈசனின் அருளை பெற உதவும்.

பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

பிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம், நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகளின் எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்.

பிரதோஷ பூஜையின் போது  அபிஷேகத்திற்காக  நாம் தரும் ஒவ்வொரு  பொருட்களுக்கும் ஒரு  பலன் உண்டு.

பால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்

 தயிர் - பல வளங்களும் உண்டாகும்

 தேன் - இனிய சாரீரம் கிட்டும்

 பழங்கள் - விளைச்சல் பெருகும்

 பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

 நெய் - முக்தி பேறு கிட்டும்

 இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்

 சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

 எண்ணெய் - சுகவாழ்வு

 சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

 மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

நோய் நொடிகளின்றி, செல்வ சிறப்புடன் வாழ இந்த பிரேதாஷ நாளில் நந்திதேவரையும், எம்பெருமான் சசிசேகரனையும்  வழிபட்டு மகிழ்வோம்!
 



Leave a Comment