திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முக்கிய அறிவிப்பு....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் முதியோர் குழந்தை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை தரிசனம் ஏப்ரல் 14ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் திருப்பதியில் கொரோனா காரணத்தினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் மற்றும் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னுரிமை தரிசனம் அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி அன்று மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்தபின் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை காண்பித்தால் மட்டுமே ஆர்ஜித சேவையில் பங்கேற்கலாம். ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் 14 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக 93 கோடியே 96 லட்சம் காணிக்கையாக செலுத்தினர்.
6 லட்சத்து 72 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். பக்தர்களுக்கு 76 லட்சத்து 61ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாட்டின் பஞ்சகவ்யத்தின் மூலம் 100 விதமான பொருட்கள் தயார் செய்யப்பட உள்ளது.
அதன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பசு பராமரிப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இந்து அறநிலையத்துறை கோயில்களை தேவஸ்தானத்தின் கீழ் இனி கொண்டு வர மாட்டோம். தேவைப்பட்டால் வரலாற்று பின்னணி, தொன்மை வாய்ந்த கோயில்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இதுவரை 32 கோயில்களை தேவஸ்தானத்திம் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Leave a Comment