செய் தொழில் வெற்றி பெற ஆண்களும்.... தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்களும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ....
ஒங்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி !
வேதாம்பிகே நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே !!
பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ய பிரியவாதினி
அவைதவ்யம் ச ஸௌபாக்யம் தேஹி த்வம் மம
ஸூவ்ருதே புத்ரான் பௌத்ரான் ஸக ஸௌக்யம் ச சௌமாங்கல்யம் சதேஹிமே !!
ஓங்காரத்தை முன்னிட்டவளே, வீணை புஸ்தகம் இவைகளை தரித்தவளான வேத மாதாவே, வைதவ்யம் வராமல் ஸூமங்கலியாக செய். கன்யைகளும் ,ஸூமங்கலிகளும் தினசரி மும்மூன்று முறை ஜபித்தால் தீர்க்க ஸூமங்கலிகளாக இருப்பார்கள்.
ஸ்நாநம் ஆரம்பிக்கும் போது ::
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹநோபம ! பைரவாய நமஸ்துப்யம் அநுக்ஞாம் தாது மர்ஹஸி !!
மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்நி போன்றவரும் ஆன பைரவரே உமக்கு நமஸ்காரம். இந்த ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும் !
கார்ய வெற்றி தரும் ஸ்லோகம்....
ஸ்துதா ஸித்வம் மஹாதேவி விஸூத்தே ந அந்தராத்மனா !
ஜயோ பவது மே நித்யம் ஸர்வ கார்யே ப்ரஸாதத: !!
ஓ மஹாதேவி ! நீ எல்லோராலும் என்னாலும் சுத்த மனதுடன் துதிக்க பட்டாய். உனதருளால் ஸகல காரியத்திலும் ஜயம் உண்டாகட்டும்.! எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் இதை 10 முறை ஜபித்தால் ஜயம் உண்டாகும் !!
Leave a Comment