கும்பகோணம் சக்கரபாணி ஸ்வாமி ஆலய தேரோட்டம்....
மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணி ஸ்வாமி ஆலயத்தில் தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் நகரமான கும்பகோணத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவாக மாசி மக பெருவிழா விளங்குகிறது. இன்று மாசிமக தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணி ஸ்வாமி ஆலயத்தில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரில் சக்கரபாணி சுவாமி, விஜயவல்லி தாயார் ,சுதர்சன வள்ளி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
இன்று மதியம் 12 மணி அளவில் கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் நகரில் உள்ள 12 சிவாலயங்களில் இருந்து வரும் உற்சவ மூர்த்திகள் மகாமக குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
Leave a Comment