வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவ தேர் 


காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

தொண்டை நன்னாட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை ஸ்ரீ முருகபெருமான் தினைப்புனங்காத்த திருமகளாம் இச்சாசக்தியாம் ஸ்ரீ வள்ளியம்மையுடன் பல திருவிளையாடல்கள் புரிந்து திருவடிபடித்து அருள் பாவித்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் வணங்கி வருகின்றனர். அதனை அடுத்து இன்று ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறும். 

இதன் தொடக்க நிகழ்ச்சியாக இன்று பிரம்மோற்சவ தேர் திருவீதி உலா இன்று நடைபெற்றது. இந்த தேர் திருவீதி உலாவை வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அவருக்கு பூரணகும்ப மரியாதை கோவில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் சார்பில் அளிக்கப்பட்டது பின்னர் எஸ்.ஆர்.கே அப்பு அவர்கள் வடம் பிடித்து தேர் திருவீதி உலாவை துவக்கி வைத்தார் இதில் வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பக்தர்கள் மட்டும் அல்லாது ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். 

பக்தர்கள் அனைவரும் இத் திருத்தேரினை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். அப்போது பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசம் பொங்க அரோகரா அரோகரா என இறைவனை நோக்கி கோஷமிட்டனர் பக்தகர்கள் அனைவரும் தங்களின் வேண்டுதல் நிறைவேரியதை அடுத்து அவர்கள் பொறி மற்றும் மெளகு பட்டு துணிகள் போண்றவற்றை காணிக்கையாக செலுத்தினர். மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படமால் இருக்க போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
 



Leave a Comment