பணக் கஷ்டம் நீக்கும் கோமாதா பூஜை.... 


வீட்டில் பசு இருப்பவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய வேண்டும் என்பதில்லை. பசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு வாங்கி, இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம்.

பூஜைக்காக பசுவைத் தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள்' என்று சாஸ்திரம் சொல்கிறது. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.

பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.

கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா பணக் கஷ்டம் நீங்கும் . ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும். ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும்.

சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும். பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும். ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்கும்.
 



Leave a Comment