திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியை முன்னிட்டு தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா.... 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமியையொட்டி அதிகாலை 5.30  மணிக்கு தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் இருந்து சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்தார்.  வடக்கு மாடவீதியில் சூரிய உதயத்திற்காக மலையப்ப சுவாமி காத்திருந்து சூரிய கதிர்கள் சுவாமி மீது விழுந்தபோது பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் சிறப்பு ஆரத்தி வழங்கப்பட்டது.  

பின்னர் வடக்கு மாட வீதி வழியாக வாகன மண்டபத்திற்கு பக்தர்களுக்கு அருள் பாலித்தப்படி வந்தார்.  இதைத் தொடர்ந்து காலை 9am to 10am மணி அளவில்  சின்ன சேஷ வாகன சேவையும், 11பிற்பகல் to 12 மணி வரை கருட வாகன சேவையும், 1 மணி முதல் 2  மணி அளவில்  ஹனுமந்த வாகன சேவையும், 2 மணி முதல் 3 மணி இடையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோயில் வளாகத்தில்  உள்ள குளத்தில்  பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி தேவஸ்தான  உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள்,  ஊழியர்கள் மட்டும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் பங்குபெற உள்ளனர். இதனை தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி அளவில் கற்பக விருட்ச வாகன சேவையும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகன சேவையும் நடைபெற உள்ளது. 

இறுதியாக 8 மணி முதல் 9 மணி அளவில் சந்திர பிரபை வாகன சேவையுடன் ரதசப்தமி விழா நிறைவு பெறுகிறது. வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தில் ஒன்பது நாட்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் 16 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ரதசப்தமி அன்று ஒரே நாளில் 7 வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுவதால் இதனை மினி பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ரதசப்தமி உற்சவத்திற்கு கடந்த காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள்  வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாட வீதியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வாகன சேவைகளை தரிசிக்க தேவஸ்தனம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment