கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழாவினை கொடியேற்றம்... அற்புதமான விடியோ காட்சி
உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்றது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில். இங்கு ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கொடியேற்று விழா இன்று 16.02.21 நடைபெற்றது.
கொரோனா காலகட்டம் என்பதால் அரசு அறிவித்துள்ள நெறி முறைப்படி கோவில் வளாகத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சாம்பன் குலம் சார்பில் மேளதாளங்கள் முழங்க தாரை தப்பட்டை அடித்தவாறு பால கொம்பு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பாலகொம்பு கொடிமரத்துக்கு முன்பாக ஊன்றப்பட்டது.
பின்னர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டிருந்த அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி எடுத்து வரப்பட்டது. பின்னர் கோயில் பூசாரியால் அம்மனுக்கு கண் திறக்கப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது பின்னர் கொடி மரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கொடிமரத்திற்கு முன்பு ஊன்றப்பட்ட பால கொம்புவில் பெண்கள், மஞ்சள் கலந்த நீரை ஊற்றினார்கள். வழிபட்டனர்.
Leave a Comment