ஒரே நேரத்தில் 11 தங்க கருடசேவை ... அற்புதமான வீடியோ காட்சி 


சீர்காழி அருகே திருநாங்கூரில் 11 தங்க கருடசேவை உத்ஸவம்.தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 வைணவ திவ்யதேசங்கள் ஸ்ரீ நாராயண பெருமாள், குடமாட கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளி கொண்டபெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன் ஸ்ரீ மாதவபெருமால்,பார்த்தசாரதி,ஸ்ரீ கோபாலன், உள்ளிட்ட  11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டு தோறும் தை அம்மாவாசை மறுநாள் பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெறும். 

இவ்வாண்டு 127ம் ஆண்டு தங்க கருடசேவை உத்ஸவம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு 11 பெருமாள்களும்  திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் எழுந்தருள சிறப்புத் திருமஞ்சணம் செய்யப்பட்டது. இரவு 12 மணிக்கு மணிமாட கோயில் கோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர். 

அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று,அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடி பெருமாள்களை சேவித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. தமிழகம் மட்டுமன்றி பலமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.



Leave a Comment