உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவில் கட்ட 2 கோடி ரூபாய் நன்கொடை
உளுந்தூர்பேட்டையில் பெருமாள் கோவில் கட்ட ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு இரண்டு கோடி ரூபாய் பணம் வசூல் செய்து தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பெருமாள் கோவில் கட்டுவதற்காக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு 4 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு ஏற்கெனவே நன்கொடையாக வழங்கி உள்ளார்.
இந்நிலையில் அங்கு கோவில் கட்ட ரூ 10 கோடி பொது மக்கள் பங்களிப்பாக வசூல் செய்து தருவதாக தெரிவித்த நிலையில் ஏற்கனேவே ரூ 1 கோடி நன்கொடை வழங்கிய நிலையில் இன்று ரூ 2 கோடியே 16 லட்சம் ரூபாய் என இரண்டு தவனைகளாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் ரூ 3.16 கோடி வழங்கினார்.
இந்த மாத இறுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கோவில், திருமண மண்டபம், அன்னதான கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்ட இருப்பதாக குமரகுரு தெரிவித்தார்.
Leave a Comment