நினைத்த காரியம் நிறைவேற தை மாத பிரதோஷம் 


தை மாத பிரதோஷ தினமானத்தன்று விரதம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து பாவங்களும் பறந்தோடும்.

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதமாகும். பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் ஈசனின் பூரண அருள் கிடைக்கும். பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.

பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். தை மாத வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்து வழிபட்டால், வாழ்வில் தடைகளையெல்லாம் தகர்ந்துவிடும்.

 பிரதோஷம் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

தை மாத பிரதோஷ தினமானத்தன்று விரதம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து பாவங்களும் பறந்தோடும்.
 



Leave a Comment