திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்க எந்த நாளில் கோ பூஜை செய்ய வேண்டும்....
தேவர்கள் முனிவர்கள் புண்ணிய நதிகள் சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வளம் வந்து வணங்கிய பலன் ஏற்படும். பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதியை நோக்கி பசுவின் பிருஷ்டபாகம் இருக்கும் படி செய்து பகவானும் மகாலக்ஷ்மியை பார்த்துக் கொள்வது போல செய்கிறார்கள்.
கோ பிராமனேப்ய சுபமஸ்து நித்யம்லோகா சமஸ்தா சுக்னோ பவந்து”
என்ற ஸ்லோகத்தின் படி பசுவை அதி காலையில் பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியமாகும். பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. கோபூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின்போது, பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.
காமதேனு பசு, மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.
பசுவை வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை வாழைப்பழம் கொடுக்கலாம். பசு தானம் வாங்குபவர்கள், லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்ன பலன் கிடைக்கும் கடன் சுமை குறையும்.
பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது.
Leave a Comment