திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஆண்டவர் ராஜ அலங்காரத்தில் காட்சி
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஆண்டவர் கோவிலில் உள்ள மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் உள்ள மூலவருக்கு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜைக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அதைத் தொடர்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை 5 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோவிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் காட்சி அளிக்க உள்ளனர். கொரோனா அச்சுருத்தலால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment