பழனி முருகன் கோவிலில் தங்கத் தேரோட்டம்


பழனி முருகன் கோவிலில் மலைமீது 306 நாட்களுக்குப் பிறகு தங்கதேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது . அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது . 

இந்த நிலையில் ஊரடங்கு உத்ரவு காரணமாக கடந்த 306 நாட்களாக நடைபெறாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சி மலைமீது நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சின்னகுமார தங்கத் தேரில் எழுந்தருளி மலை மீது வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்கத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பியபடி கருதி வழிபட்டனர்.



Leave a Comment