போகி பண்டிகையின் வரலாறு குறித்து புராணங்கள் சொல்லும் தகவல்களை விரிவாக பார்போம்.
போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் மற்றும் கிருஷ்ண பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். ஆணவத்தில் திகைத்த இந்திரனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார் பகவான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார். அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார்.
இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். மூன்று நாட்களுக்கு நீடித்தது அந்த மழை அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.
அதன் பின் பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன் கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல் இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார். இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.
Leave a Comment