அர்த்தத்துடன் வழிபடுவோம்.....!


அபிஷேகத் தத்துவம்:
கோயிலுக்கு செல்கிறோம் . குருக்கள் எதோ அபிஷேகம் செய்கிறார்.கும்பிட்டுவருகிறோம். ஆனால் அதன் தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
நம்மை காக்கும் கடவுளுக்கு முதலில் தூய நீர், மஞ்சள் நீர், ஆகியவற்றில் நீராடிய பின் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது நல்லது.

தூய நீர் :
தூய வாழ்கை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் இறைவனிடம் வெளிப்படுத்துகிறோம்.

மஞ்சள் :
மங்களமும், ஆரோக்கியம் பெருக வளம் கொண்ட வாழ்வைப் பெற மஞ்சள் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பால் :
களங்கமற்ற மனம் வேண்டி செய்யப்படும் அபிஷேகம் பாலாபிஷேகம்.

சந்தனம்
தேயத்தேய சந்தனம் மணப்பது போல் பிறருக்காக உழைத்து, வாழ்க்கையில் தியாகம் புரிவதைக் குறிக்கும்.

பன்னீர் :
பன்னீர் போன்ற தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கும்.

விபூதி :
இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல்தான் என்பதை விபூதி அபிஷேகம் உணர்த்தும். அர்த்தத்துடன் வழிபடுவோம் . தத்துவத்தை புரிந்து கொள்வோம் பலனை பெறுவோம்.



Leave a Comment