உலகிலேயே மிக உயரமான சனிபகவான் சிலைக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்....
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு உலகிலேயே மிக உயரமான சனிபகவான் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
திண்டிவனம் அடுத்த மொராட்டாண்டி கிராமத்தில் உலகிலேயே மிக உயரமான 27 அடி உயர பக்தானுக்ரஹ விசுவரூப பஞ்சமுக சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இன்று காலை 5.22 மணிக்கு நடந்த சனிப்பெயர்ச்சியில் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இன்று காலை 5.22 சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயற்சியடைந்தார். மகர ராசிக்காரர்கள் மற்றும் பரிகார ராசிக்காரர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர். இந்த கோயிலில் உள்ள 80 அடி உயர மகரம் கும்பத்தில் எட்டாயிரம் லிட்டர் நல்லெண்ணெய் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.
சனி பகவானை குளிரச் செய்யும் விதமாக 17 அடி உயரம் கொண்ட சனீஸ்வர பகவானுக்கு 44 நாட்கள் தொடர்ந்து நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறும்.இன்று நடந்த சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment