மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்
தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இடம் பெயர்ந்தார்.
2017-ம் ஆண்டுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா இன்று அதிகாலை 5.22 மணிக்கு நடைபெற்றது. அதன்படி சனிபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீசார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்ல துவாதசியும் - க்ருத்திகை நக்ஷத்ரமும் - அமிர்தயோகமும் - ஸாத்ய நாமயோகமும் - பாலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 57.04க்கு - அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறினார்.
மகர ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.
சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு கோவிலில் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
சனிப்பெயர்ச்சியின் போது சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
Leave a Comment