வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!


பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியான  இன்று அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்களுக்கு படிப்பதே வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவாகும்.  பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதன் அதிகாலையில் சொர்க்கவாசல் வழியாக வருவதே சொர்க்கவாசல் திறப்பு என கூறப்படுகிறது.

பெருமாள் திருத்தலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் சொர்க்கவாசல் நிகழ்வு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளிட்ட வைணவத் திருதலங்களில் இன்று அதிகாலை திறக்கப்பட்டது.

முதல் 10 நாட்களுக்கு நடைபெற்ற பகல்பத்து எனும் திருநாள் நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்த 10 நாட்களுக்கு நடைபெறும் ராப்பத்து எனும் திருநாள் இன்று துவங்குகிறது.

இந்நிலையில், அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டு கோவிலின் பிரகாரத்தில் உலாவந்து பின் காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
 



Leave a Comment