சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய செய்தி.... இன்று முதல் 5 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதி....


சபரிமலையில் தரிசனத்திற்காக இன்று முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருவாரியான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க செல்வர்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினமும் 1000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டாத்கள். அதே சமயம் மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26ஆம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும் ஜனவரி 14ஆம் தேதி மட்டும் தலா 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தது.

நாள் ஒன்றுக்கு 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் பலரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றம் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களை தரிசனத்து அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு இன்று முதல் 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

அதே சமயம் கொரோனா கட்டுப்பாடுகளும் தீவிரமாகியுள்ளன. தீவிர சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Leave a Comment