திருப்பதியில் நவம்பர் மாதம் ரூ.65.4 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் 8 லட்சத்து 99 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் ரூ 65. 4 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாநில பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நவம்பர் மாதம் 8 லட்சம் 99 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூ 61கோடியே 29 லட்சமும், இ - உண்டியல் மூலமாக ஆன்லைனில் ரூ 3 கோடியே 75 லட்சம் செலுத்தினர். மேலும் 2. 95 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு 50 கோடி 4 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி தெரிவித்தார்.
Leave a Comment