திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்.... 


நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு  காரைக்காலை  அடுத்துள்ள திருநள்ளாறில் கோயில் அமைந்துள்ளது. தர்பாரண்யேஸ்வரர்  என்று அழைக்கப்படும் இந்த தேவஸ்தானத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .இங்கு சனீஸ்வர பகவான் அபய ஹஸ்த முத்திரையுடன் கிழக்கு நோக்கி அருள் செய்துவருகிறார் . பரிகார தலங்களில் ஒன்றான இத்திருத்தலத்திற்கு தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி  வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இதனால்  இங்கு கூட்டம் குவியும்.

அடுத்து நடைபெற இருக்கிற சனி பெயர்ச்சியையொட்டியும்  சனிப் பிரதோஷம் என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும்  பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். 

வருகிற 27-ஆம் தேதி அன்று  அதிகாலை 5. 22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்கிறார் .இதனால் மகரராசி,  கும்பராசி ,தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் ஆகும். மிதுன ராசிகாரர்களுக்கு அஷ்டமசனி காலம் ஆகும். விருச்சிக ராசி, சிம்ம ராசி மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களே ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

சனிப் பெயர்ச்சியை ஒட்டி வருகின்ற பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கோடு மாவட்ட நிர்வாகத்துடன் தேவஸ்தான நிர்வாகம் இணைந்து முன் ஏற்பாடுகளை  செய்து வருகிறது.



Leave a Comment