அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்பட்டது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்பட்டது. இதையடுத்து பரணி தீபம், கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 50 சன்னதிகளின் நெய் தீபம் ஏற்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக இன்று மகா தீப பெருவிழா நடைபெறுகிறது. 10ஆம் நாளான இன்று கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக நேற்று காலை தீபக்கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும், தீபம் ஏற்றுவதற்காக ஆயிரம் மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை, இன்று காலை மலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவும், மலைக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வருவதை தடுக்க 15 சாலை சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், நகர எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகிறது. வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில், 4 டிஐஜிகள், 8 எஸ்பிக்கள் உள்பட 2,700 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்பட்டது.
Leave a Comment