திருநள்ளாறில் டிசம்பர் 27 சனிப்பெயர்ச்சி.... 


திருநள்ளாறில் டிசம்பர் 27 அரசு விதிமுறைகளுக்குட்பட்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதை சனிப்பெயர்ச்சி விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தாண்டு வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி இன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பந்தல்கால் முகூர்த்துடன் சனிப்பெயர்ச்சி விழா துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, துணை ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான ஆதர்ஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் "இது சனி பெயர்ச்சிக்காண தொடக்க நிகழ்ச்சி ஆகும் என்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் எனவும் சனிபெயர்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



Leave a Comment