செல்வம் பெருக பிரதோஷ பூஜையின் போது இந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்ங்க.... 


பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். 

பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் - பல வளமும் உண்டாகும்

3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் - விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

6. நெய் - முக்தி பேறு கிட்டும்

7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் - சுகவாழ்வு

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்



Leave a Comment