பழனி முருகன் கோயிலில் சண்முகர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்


பழனி முருகன் கோவில் கந்த சஷ்டியை முன்னிட்டு சண்முகர் - வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் விமர்சியாக நடைபெறக்கூடிய விழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது நேற்று கந்த சஷ்டி தினத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து சூரபத்மனை போரில் வெற்றி கொண்ட முருகக் கடவுளுக்கு பக்தர்கள் வள்ளி தெய்வானை மணமுடித்து வைத்து வணங்கி மகிழ்கின்றனர். முன்னதாக சண்முகர்- வள்ளி, தெய்வானைக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், திரவியம், பழங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. 

பழனி மலைமீது நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் ஊழியர்கள் மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
 



Leave a Comment