திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர புஷ்ப யாகம்... அற்புதமான விடியோ காட்சி
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின், 4 டன் மலர்களால் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்றுவந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று வியாழக்கிழமை முடிவுற்றதையடுத்து, தாயாருக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. இதையொட்டி, காலை தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், யாகம் வளர்த்து தாயாருக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது.
அதில், ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, தேன் பூக்கள், தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட மலர்களாலும், மருவு, மரிக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி உள்ளட்ட பத்ரங்களாலும் (இலைகள்) தாயாருக்கு அர்ச்சகர்கள் யாகத்தை நடத்தினர். இதற்காக 4 டன் மலர்கள் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a Comment