குழந்தை பாக்கியம் தரும் நாக சதுர்த்தி விரதம்!
கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.
பொதுவாக ஆடி மாதம் சதுர்த்தி தொடங்கி ஆனி மாதம் சதுர்த்தி வரை இடைப்பட்ட அனைத்து சதுர்த்திகளுமே நாகசதுர்த்திதான். ஆடி மாதம் தொடங்கும் இந்த சதுர்த்தி ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் நாக சதுர்த்தியோடு பூர்த்தியாகும். அதில் முக்கியமானது ஐப்பசி மாதம் சஷ்டி விரதத்தோடு கடைப்பிடிக்கப்படும் நாக சதுர்த்தி. இந்த நாளில் எங்கெல்லாம் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் நாகத்துக்கு விரதமிருந்து, பூஜை செய்து வழிபடலாம்.
திருநாகேஸ்வரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட சர்ப்ப தோஷ நிவர்த்தி தலங்களுக்குச் சென்று நாகத்தை வழிபட வேண்டும். தலங்களுக்குச் சென்று நாகத்தை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் அம்பாளையும், சிவனையும் வணங்கினால் ராகு - கேது, சர்ப்ப தோஷங்கள் என்று அனைத்து விதமான தோஷங்களும் விலகி திருமணம் கைகூடும். பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நாக தோஷமிருப்பவர்கள் ஜாதகத்தைக் கணித்து நாகரத்தினத்தை அணிந்துகொண்டாலும் நல்லது நடக் கும்.
Leave a Comment