கார்த்திகை  விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்... 


கார்த்திகை வந்துவிட்டாலே, ஐயப்ப சுவாமிக்கான பக்தர்களின் மாதம் துவங்கிவிடும்.இன்றைய தினம்  கார்த்திகை மாதம் பிறந்துவிட்டதால் . ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கினர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்இதனையடுத்து

 கார்த்திகை முதல் நாளை யொட்டி சென்னை புதுவண்ணாரப்பேட்டை  ஐயப்பன் கோவிலில்  காலையிலேயே பக்தர்கள்  குவியத் தொடங்கினர்  துளசி  மாலையணிந்து சாமியே சரணம் ஐய்யப்பா  என்ற பக்தி கோஷத்துடன்  விரதத்தை தொடங்கினர் 

கார்த்திகை முதல் தேதி மாலையணிந்ந்து, ஐயப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொள்ளும்  பக்தர்கள். ஒருமண்டல காலம் விரதம் இருந்த பிறகு, இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்குப் யாத்திரை செல்வார்கள்  ஆனால் இப்போது வேலை மற்றும் பல காரணங்களால், விரதம் இருந்த சில நாட்களிலேயே சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் முதல் நாளிலேயே விரத்தை துவங்கினர் 

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  ஆயிரக்கணக்கான ஐய்யப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

 சபரிமலை ஐயப்பன்  கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது.  இந்த நிலையில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி   அறுபடை வீடுகளில் இரண்டாம் படை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 04-00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 04-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் , 05-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து விரதமிருக்கக்கூடிய ஐயப்ப பக்தர்கள்  அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடிமரத்தில் மற்றும் வல்லப விநாயகர் சன்னதியில் துளசி மாலை அணிந்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோசங்கள் முழங்க விரதத்தை தொடங்கினர். இதனால் கோவில் பகுதி முழுவதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.



Leave a Comment