சபரிமலை செல்ல ஆன்லைன் புக்கிங்....முந்துங்கள்....தினமும் 1,000 பேர் மட்டுமே அனுமதி....
புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. சபரிமலை: மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக, இந்த ஆண்டிற்கான ஆன்லைன் முன் பதிவு ( Virtual Q Booking Tickete ) நவம்பர் 1 (1/11/2020) முதல் தொடங்குகிறது !
டிக்கெட்டுகள் நவம்பர் 1, 2020 முதல் ஜனவரி 14 / 2021 வரை மட்டுமே முன்பதிவு செய்யக் கிடைக்கும். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவினை தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போதுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2500 பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. குறிப்பு: (1000 பக்தர்கள் அனுமதிப்பது தொடர்பான நிலைபாடு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது)
முன் பதிவு செய்ய போட்டோஉடன் கூடிய அரசு ஆவணங்கள் தேவை என அறிவுருத்தப்பட்டுள்ளது. இதற்கு Aadhar Card, Pan card, voter ID, Driving licence இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் விண்ணுயிர் செய்யமுடியும்
முன்பதிவுசெய்ய
www.sabarimalaonline.org எண்ற இணையத்தில் மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும் !
மண்டல பூஜை டிசம்பர் 26 ம் தேதியும், 41 நாள் மண்டலபூஜை நிறைவடைந்த பிறகு (யாத்திரை காலத்திற்குப் பிறகு ) டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் திருகோயில் நடை அடைக்கப்படும்.
இது மகரவிளக்கு புனித யாத்திரைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு 2021 ஜனவரி 14 ஆம் தேதி முடிவடைந்த பிறகு , கோயில் திருநடை ஜனவரி 20 ஆம் தேதி மூடப்படும். சபரிமலை நடை நவம்பர் 15 மாலை திறக்கப்படும் பக்தர்கள் நவம்பர் 16 முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment