ஆயுத பூஜை.... பூஜை செய்ய இந்த நேரத்தை மிஸ் பண்ணாதீங்க....


சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 9ம் தேதி, அக்டோபர் 25 நவமி திதியில், அன்னையின் ஆயுதங்களை பூஜை செய்த நாள். அந்த வகையில் நாமும் தற்போது நம் வாழ்வாதாரத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடிய தொழில் செய்வதற்கான பொருட்களை, உபகரணங்களை பூஜிப்பது வழக்கம்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட, சுவாமி வழிபாடு செய்ய நல்ல நேரம்
25 அக்டோபர் 2020 (ஐப்பசி 9) ஞாயிற்றுக் கிழமை

அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை மட்டும்

காலை 7 மணி முதல் 10 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) - ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

காலை 11 மணி முதல் 12 மணி வரை (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை

பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) - ஆயுத பூஜை மட்டும்

இரவு 9 மணி முதல் 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) - ஆயுத பூஜை மட்டும்

பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம்
ஞாயிறு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம்
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இராகு காலம்
இரவு 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம்
இந்த நேரங்களில் சுவாமி வழிபாடு செய்வதை தவிர்ப்பது சுபம் தரும்.
 



Leave a Comment