நவராத்திரி கொலு வைக்க நல்ல நேரம் எது? 


பொதுவாக நவராத்திரி கொண்டாட்டம் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினமான மகாளய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை 2020 புரட்டாசி மாதத்தில் 1ம் தேதியும், புரட்டாசி 30ம் தேதியும் அமாவாசை வந்துள்ளது. அதனால் முதல் அமாவாசையை தவிர்த்து, 30ம் தேதியில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து அதாவது ஐப்பசி 1 (அக்டோபர் 17) தேதியிலிருந்து இந்த பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இது போன்று விதிக்குமாறாக சில ஆண்டுகளில் நவராத்திரி கொண்டாட்டம் மாற்றத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2001 மற்றும அதற்கு முன் 1982ம் ஆண்டு இதே போல் புரட்டாசி மாதம் அமாவாசையில் கடைப்பிடிக்கக் கூடிய மகாளய அமாவாசை அடுத்து நவராத்திரி கொண்டாடாமல் ஒரு மாதம் கழித்து கடைப்பிடிக்கப்பட்டது.

நவராத்திரி ஆரம்பம் காலை 7.31 - 9.00 மணிக்குள் கொலு வைக்க மிக நல்ல நேரம்.

அக்டோபர்  25 (ஞாயிற்றுகிழமை) சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட (நல்லநேரம் காலை 7.31 - 9.00 மணி)

அக்டோபர், 26 (திங்கட்கிழமை) விஜயதசமி (கொலு எடுக்க காலை 6.00 - 7.30 மணி)
 



Leave a Comment