பெருமாளுக்கு 100 கிலோ எடையில் உலர் பழங்களை கொண்டு அலங்காரம்
சென்னை திருவொற்றியூரில் 400 ஆண்டுகள் பழமையான காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் நான்காம் வாரத்தை முன்னிட்டு விசேஷமாக 100 கிலோ எடையில் 13 வகைகளான உலர் பழங்களை கொண்டு அலங்கார மாலை மற்றும் ஆடைகள் அணிவிக்கப்பட்டன.
வரலாற்று சிறப்புமிக்க சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் விசேஷ பூக்களைக் கொண்டு விதவிதமான மாலைகள் அணிவிப்பது வழக்கம்
இந்நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் நான்காம் வாரத்தை முன்னிட்டு பாதாம் ,முந்திரி, பிஸ்தா ,திராட்சை, அக்ரூட் ,கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ஆப்பிரிக்காட் உள்ளிட்ட 13 வகையான உலர் பழங்களை கொண்டு மூலவர் கல்யாண வரதராஜப்பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு ஆடைகள் வடிவமைக்க பட்டன இதனைத்தொடர்ந்து உற்சவர் பவள வண்ண பெருமாள் மற்றும் தாயார் ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி ,தாயாருக்கு உலர் பழங்களான கிரீடங்கள் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
வெண்கொற்றக் குடையின் கீழ் காட்சி தரும் பெருமாள் இன்று சிறப்பு பழங்களான கொடைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புரட்டாசி மாதத்தில் கடைசி வாரமான நான்காவது சனிக்கிழமையில் பெருமாளுக்கு 100 கிலோ எடையிலான சிறப்புவாய்ந்த விதவிதமான பழங்களை கொண்டு அலங்காரம் செய்திருப்பது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.
Leave a Comment