திருப்பதி ஏழுமலையானை நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது தரிசிக்க டிக்கெட்....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் சாமி தரிசனம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்கி இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 16ம் தேதி தொடங்கி 24ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி 15ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்கப்பட்டு சுவாமி வீதிஉலாவை காணும் விதமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாத பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று வீதி உலாவை காணவும், மூலவரை தரிசனம் செய்வதற்காக ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் 15ஆம் தேதி முதல் 24ம் தேதி வரைக்காண டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரியான https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற முகவரியில் சென்று பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் 19ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடை பெற்ற வருடாந்தர பிரம்மோற்சவத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரம்மோற்சவ விழாவில் சுவாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள்ளேயே கல்யாண மண்டபத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு சுவாமி வீதிஉலா வருவாரா, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் நவராத்திரி பிரம்மோற்சவம் சுவாமி வீதி உலா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களும் வீதி உலாவில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment