திருப்பதியில் ஒரே நாளில் ரூ.2.34 கோடி உண்டியல் வசூல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஒரே நாளில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை.
திருப்பதி ஏழுமலையான் கோவில் இம்மாதம் 19 தேதி முதல் 27 ஆம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தில் வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக குறைந்தபட்ச பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பிரம்மோற்சவம் நடைபெற்ற நாள்களில் ஏழுமலையானை டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் பிரம்மோற்சவம் நடந்த 9 நாட்களில் தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 898 பேர் தரிசனம் செய்தனர்.
38 ஆயிரத்து 190 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக 10 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் செலுத்தினர். இதில் நேற்று ஒரே நாளில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக நேற்று ஒரே நாளில் ரூ 2.34 கோடி வந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment