கருட வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை கோவில் வளாகத்திற்குள் நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பேடி ஆஞ்சநேயர் கோவில் அருகே பரிவட்டம் கட்டப்பட்டு பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்தவாறு ஏழுமலையானுக்கு கொண்டு சென்று சமர்ப்பித்தார்.
அதன்பின் கல்யாண மண்டபத்தில் உள்ள கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டார். ஜீயர்களின் திவ்ய பிரபந்தம் பாராயணம், வேத பண்டிதர்களின் வேத பாராயணம் முழங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கருட சேவையை முன்னிட்டு கோயில் வளாகம் 7 டன் மலர்களை கொண்டு பல்வேறு வகை தோரணங்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது. மேலும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்த 2021 ஆண்டுக்கான தேவஸ்தான கலெண்டர் மற்றும் டைரியை வெளியிட்டார்.
Leave a Comment