சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள்  சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.  

 திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் முரளி கிருஷ்ண அலங்காரத்தில் எழுந்தளினார் மலையப்ப சுவாமி. 

பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சின்ன சேஷ வாகனத்தை வாசுகியாகவும்  கோயிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீயர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடினர். வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர்.  

பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னம் பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

 



Leave a Comment