மகாளய அமாவாசைக்காக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி
மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு செல்ல செப்டம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி வழங்கி வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் ஊரடங்கில் இருந்து தளர்வு விதித்து கோவிலை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. வருகிற 17-ந் தேதி மகாளய அமாவாசை வருகிறது. இதையடுத்து வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால் மகாளய அமாவாசையன்று அல்லது அதற்கு முன்பாக மழை பெய்தால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல அமாவாசையன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Leave a Comment